சுற்றறிக்கை எண் ( 1 )
நம்முடைய டிலைட் அரிமா சங்கத்தின்
செயல்பாடுகள் அனைத்தும் முறையாகவும்
மிகச் சரியாகவும் குறித்த நேரத்திலும்
கிடைக்கும்படியாக இருக்க இந்த
வலைத்தளத்தை பரிட்சார்த்த முறையில்
துவங்கியுள்ளோம்
தாங்கள் இதைத் தொடர்ந்து பார்வையிடவேணுமாயும்
தங்கள் மேலான கருத்தைஎனது இ.மெயில் ஐ,டிக்கு
அனுப்பி வைக்கவேணுமாயும்
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
சுற்றறிக்கை எண் ( 2 )
நமது உறுப்பினர் விண்ணப்பமும்
நமது சங்கமும் உலக அரிமா சங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்டு அதற்கான அத்தாட்சிக் கடிதம்
கிடைக்கப்பெற்றுவிட்டது என்பதை
மகிழ்வுடன் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்
நமது முறைப்படியான பதவி ஏற்புவிழாவில்
நமது மதுரை மாவட்ட ஆளுனர் அவர்கள்
கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
நிகழ்ச்சி 14 மார்ச் 2014 அன்று மாலை
திரு நகர் டவுன் கிளப்பில் மாலை
6.00 மணி முதல் 8.00 மணிவரை
நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதனைத்
தெரிவித்துக் கொள்வதில் மிக்க பேரானந்தம் கொள்கிறோம்
வாழ்த்துக்களுடன்.....
எஸ் வெங்கட சுப்ரமணியன்
தலைவர்